Advertisement

மனித -விலங்கு மோதலை தடுக்க வருகிறது கேமரா!

பொது ஆகஸ்ட் 17,2019 | 17:47 IST

Share

கோவையில் வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் மனித-விலங்கு மோதல் ஏற்படுவதை கட்டுப்படுத்த, கோவையில் உள்ள ஏழு வனச்சரகங்களில், யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் இன்ட்ரா நெட் தொழில்நுட்பத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. வனத்தில் இருந்து வெளியேறும் யானைகளை 600 மீட்டர் தொலைவிலேயே இந்த கேமராக்கள் படமெடுத்து, லோக்கேஷனுடன் கன்ட்ரோல் அறைக்கு அனுப்பும். அதைவைத்து, அப்பகுதி கிராம மக்களுக்கும் முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய முடியும். அத்துடன் அங்குள்ள வனஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து யானைகளை மீண்டும் வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்திற்காக 7.24 கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரயில்வே தண்டவாளத்தில் சோதனை முறையில் இத்திட்டத்தை செயல்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X