Advertisement

காதலனுடன் சென்ற சிறுமிக்கு அடி

பொது ஆகஸ்ட் 17,2019 | 18:08 IST

Share

ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 20 வயதுடைய உறவுக்கார பையனை காதலித்தார். பெற்றோரின் சம்மதம் கிடைக்காது என்று எண்ணிய அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். தகவல் அறிந்த கிராம மக்கள் இருவரையும் பிடித்து வந்து பஞ்சாயத்தில் நிறுத்தினர். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் சிறுமியிடம் சில கேள்விகளை கேட்கிறார். உரிய பதிலளிக்காத நிலையில், முதியவர் அந்த சிறுமியை சராமாரியாக தாக்குகிறார். கையால் தாக்கிய அவர், தடியாலும் அடிக்கிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியதால், அனந்தபூர் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X