Advertisement

கோக்கு வேணாம் தண்ணீ போதும்

பொது ஆகஸ்ட் 17,2019 | 18:36 IST

Share

ஓரளவுக்கு பருவமழை பெய்ததால் சென்னை குளிர்ந்தது. ஆனால் தண்ணீர் பிரச்னை ஓய்ந்தபாடில்லை. சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில், நிலத்தடி நீர் வற்றிய நிலையில் ஒன்றரை மாதமாக குழாயில் குடிநீரும் வரவில்லை. 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிக்கவும் குளிக்கவும் புழங்கவும் லாரி தண்ணீரையே நம்பியுள்ளனர். இரு தினங்களாக குழாயில் தண்ணீர் கறுப்பு நிறமாக வருவதைக் கண்ட பெண்கள் ஆவேசமடைந்தனர். குடிநீர் வாரியத்தை முற்றுகையிட்டனர். சாக்கடை நீரை குடித்து போராட்டம் நடத்தினர். சாக்கடை நீரால் தோல்வியாதிகள் வருவதாகவும் பெண்கள் புலம்பினர். பிரச்னையை 20 நாட்களில் தீர்ப்பதாக சென்னை குடிநீர் வாரியம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதற்குள் தண்ணீர் பிரச்னையை தீர்க்காவிடில் ரேஷன் கார்டு, ஓட்டர் ஐ.டியை அரசிடமே ஒப்படைத்துவிட்டு, அகதிகளாக வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என எம்.எம்.டி.ஏ. காலனி பெண்கள் கூறினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X