Advertisement

எம்மதமும் சம்மதம்: மாதவன் பதிலடி

சினிமா வீடியோ ஆகஸ்ட் 17,2019 | 20:23 IST

Share

சுதந்திர தினம், ரக்ஷா பந்தன், ஆவணி அவிட்டம் ஒரே நாளில் வந்ததால் வாழ்த்து கூறி, தன் அப்பா, மகன் உடன் வீட்டில் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டார் நடிகர் மாதவன். அவரது பூஜை அறையில் சிலுவை ஒன்று இருந்ததைக் கண்டு ரசிகர் ஒருவர் விமர்சித்தார். இதற்கு பதிலளித்த மாதவன், “நீங்கள் சீக்கிரமே குணமடைவீர்கள் என நம்புகிறேன். கோல்டன் டெம்பிள் படமும் பின்னாடி இருப்பதை, நீங்கள் பார்க்கவில்லையா. நான் சீக்கிய மதத்திற்கு மாறிவிட்டேன் என்று கேட்கவில்லையா. எல்லா புனித இடங்களிலும் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறேன். சில வாங்கப்பட்டவை, சில பரிசாகப் பெற்றவை. எங்கள் வீட்டில் அனைத்தையும் கும்பிடும் வழக்கம் உண்டு. அதை எனது மகனும் பின்பற்றுவார். கோயில்கள் இல்லாத இடத்தில் நான் தர்கா, குருத்வாரா, சர்ச் சென்று பிரார்த்தனை செய்துள்ளேன். நான் இந்து என தெரிந்திருந்தும் என் மீது மரியாதை காட்டியுள்ளார்கள்'' என டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X