Advertisement

பால் விலை உயர்வு ஏன்?: முதல்வர் விளக்கம்

பொது ஆகஸ்ட் 18,2019 | 16:04 IST

Share

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலை மற்றும், விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் பழனிசாமி கூறினார். 5 ஆண்டுகளாக பால் விலை உயர்த்தவில்லை; விற்பனை விலை கொள்முதல் விலை இரண்டையும் கணக்கிட்டுதான் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பால் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில்தான் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றார். கால்நடை தீவனங்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வாய்ப்பு இல்லை. டெல்டா பகுதியில் பெய்துவரும் மழையை கணக்கிட்டு தேவையான தண்ணீர் திறக்கப்படும். புதிய கல்வி கொள்கையை பொருத்தவரை இருமொழி கொள்கை பின்பற்றுவதில் திடமாக உள்ளோம் என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X