Advertisement

மனைவி நல வேட்பு விழா

பொது ஆகஸ்ட் 18,2019 | 00:00 IST

Share

ஸ்ரீ வில்லிபுத்தூர் அறிவுத் திருக்கோயிலில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் 150வது ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது. ஆழியார் உலக சமுதாய சேவா சங்க இயக்குனர் தங்கவேலு, கல்பாக்கம் அணுமின் நிலைய முன்னாள் இயக்குனர் வேல்முருகன்- ராஜஸ்ரீ தம்பதியினர் மற்றும் ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் -மேனகா தம்பதியினர் கலந்து கொண்டனர். மனைவி நல வேட்பு விழாவில் இளம் தம்பதி முதல் முதிய தம்பதியினர் வரை, 150 தம்பதியர்கள் பங்கேற்றனர். மனைவிக்கு ரோஜா மலரை அளித்து கணவனும், கணவனுக்கு ஆப்பிள் வழங்கி மனைவியும் உறுதிமொழி அளித்தனர். நிர்வாகிகள் சர்வஜித், முருகானந்தம், ராமர் முருகன் ஏற்பாடுகளை செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X