Advertisement

மாநில கபடி; வெள்ளிங்கிரி, வெற்றி

விளையாட்டு ஆகஸ்ட் 18,2019 | 00:00 IST

Share

கோவை, குறிச்சி பிரண்ட்ஸ் கிளப் சார்பில், 2ம் ஆண்டு மாநில கபடி போட்டி, சுப்ரமணியர் கோவில் திடலில் நடந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. ஞாயிறன்று நடந்த ஆண்களுக்கான போட்டியில், ஜான்சன் ஸ்போர்ட்ஸ் அணி , 14-12 என்ற புள்ளி கணக்கில், கோவை கல்கி அணியையும்; கோவை கற்பகம் 'பி' அணி, 22-7 என்ற புள்ளி கணக்கில், அன்னை சத்யா அணியையும் வென்றன. காருண்யா பல்கலைக்கழக அணி, 25- 15 என்ற புள்ளி கணக்கில், மனோஜ் நினைவு அணியையும்; கே.கே.எஸ்.சி., குறிச்சி அணி, 30-9 என்ற புள்ளி கணக்கில், சங்கமம் பாய்ஸ் அணியையும் வென்றன. வெள்ளிங்கிரி பாய்ஸ் அணி, 30-16 என்ற புள்ளி கணக்கில், அல்ஹாசர் மெட்ரிக் பள்ளி அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X