Advertisement

போதையில் கார் ஓட்டியவருக்கு தர்ம அடி

சம்பவம் ஆகஸ்ட் 19,2019 | 15:00 IST

Share

புதுச்சேரி, சாரம் அன்னை தெரேசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தனது நண்பருடன் ஞாயிறன்று காமராஜர் சாலையில் உள்ள அண்ணாமலை ஹோட்டல் அருகே வந்துகொண்டிருந்தபோது தனது காரை திருப்பி உள்ளார். அப்போது கார் கட்டுப்பாட்டை மீறி சைக்கிளில் வந்துகொண்டிருந்த ஒருவர் மீது மோதியது. தொடர்ந்து அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதி, அங்குள்ள மின்சார கம்பத்தின் மீது மோதி நின்றது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அவரைச் சரமாரியாக தாக்கினர். சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் கார்த்திகேயனை அழைத்து சென்று விசாரித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X