பொது » முதல்வரின் குறைதீர்க்கும் திட்டம் ஆகஸ்ட் 19,2019 16:23 IST
சட்டசபையில் அறிவிக்கப்பட்டதுபோல், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி சேலத்தில் துவங்கி வைத்தார். பின் பேசிய அவர், தமிழகம் முழுவதும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் வார்டு வாரியாக, அரசுத்துறை அதிகாரிகளை கொண்ட குழு, குறிப்பிட்ட நாளில் நேரடியாக சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுவார்கள் என்றார். அவற்றை கம்ப்யூட்டரில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும். பொதுமக்கள் அதிகாரிகளை தேடி செல்வதற்கு பதிலாக, அதிகாரிகளே பொதுமக்களை நாடிவந்து குறைகளை தீர்க்கும் நிலையை உருவாக்கியுள்ளோம் என்றார்.
வாசகர் கருத்து