Advertisement

வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்ட விமான படையினர்

சம்பவம் ஆகஸ்ட் 19,2019 | 15:00 IST

Share

ஜம்முவில் பெய்த கனமழையால், தாவி (Tavi) நதியில் வௌ்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இருவர் வௌ்ளத்தில் சிக்கினர். அவர்கள் நதியிலிருந்த தடுப்பு சுவர் மீது ஏறி நின்று காப்பாற்றும்படி குரல் எழுப்பினர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், மீட்க சென்றபோது, கடும் வெள்ளத்தால் மீட்பு பணியில் இறங்கவில்லை. இதையடுத்து, விமான படையினர் ஹெலிகாப்டர் மூலம் நதி மேலே பறந்தபடி இருவரையும் காப்பாற்ற முடிவு செய்தனர். அதன்படி வீரர் ஒருவர் கயிறு மூலம் நதியின் தடுப்புசுவர் மீது இறங்கினர். பின்னர் இருவரையும் கயிற்றில் கட்டி பத்திரமாக மீட்டனர். அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X