Advertisement

சொந்த மண்ணில் அகதிகளாய் பூர்வகுடிகள்

பொது ஆகஸ்ட் 19,2019 | 17:56 IST

Share

பந்தலூரிலிருந்து 10 கி.மீ., தொலைவிலுள்ள கிளன்ராக் வனப்பகுதியில் 13 காட்டுநாயக்கர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. வாரம் ஒருமுறை பந்தலூர் வந்து தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு ஊர்திரும்பும் மக்கள் வேறு எதற்கும் வெளியில் செல்வதில்லை. நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு, பாதை துண்டிப்பு, காட்டாற்று வெள்ளம் போன்றவற்றால் கிளக்ராக்கிற்கு செல்லும் மண்பாதைகள் சேதமடைந்தது. இதனால், பூர்வகுடி மக்கள் வனத்திற்குள்ளேயே முடங்கினர். மழையால் வீடுகள் இடிந்து அவதிப்பட்ட மக்கள், உணவின்றியும் தவித்துள்ளனர். மின்கம்பங்கள் சேதமடைந்து மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால், அடர்ந்து வனத்திற்குள் இருளில் மூழ்கிக் கிடந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் கிடைத்த நிலையில், இவர்களை யாரும் கண்டு கொள்ளவில்லை. உதவிக்கு யாரும் செல்லாததால் ஆற்றை கடக்க அவர்களே பாக்குமரங்களால் தற்காலிக பாலம் அமைத்துள்ளனர். நக்சல் நடமாட்டமுள்ள கிளன்ராக் வனப்பகுதியை அரசு கண்டு கொள்ளாவிடில் அப்பகுதி நக்சல்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல வாய்ப்புள்ளதாக சமூகஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். கிளன்ராக் செல்லும் சாலைகளை சீரமைத்து, அங்குள்ள பூர்வகுடி மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X