Advertisement

மாணவிகள் கிரிக்கெட் விவேகானந்தா வெற்றி

விளையாட்டு ஆகஸ்ட் 19,2019 | 18:38 IST

Share

கோவை, சரவணம்பட்டி, குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி சார்பில், 6வது மகாலிங்கம் சுழற்கோப்பை, பெண்களுக்கான கிரிக்கெட் மற்றும் ஆண்களுக்கான ஐவர்கால்பந்து போட்டி, கேசிடி கல்லூரியில் நடந்தது. திங்களன்று நடந்த மாணவிகளுக்கான கிரிக்கெட் போட்டியில், கே.சி.டி., கல்லூரியும், விவேகானந்தா கல்லூரியும் மோதின. முதலில் பேட் செய்த விவேகானந்தா அணி, 12 ஓவரில், இரண்டு விக்கெட் இழப்புக்கு, 109 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய கே.டி.சி., அணி 12 ஓவரில், ஐந்து விக்கெட் இழப்புக்கு, 54 ரன்கள் மட்டுமே எடுத்ததால், விவேகானந்தா அணி, 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மாணவர்களுக்கான ஐவர் கால்பந்து போட்டியில், எஸ்.என்.ஜி.சி., அணி, 3க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியை வென்றது. ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, 2-1 என்ற கோல் கணக்கில், கோவை கலைமகள் கல்லூரியை வென்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X