Advertisement

நீரை சேமிக்க வழி சொல்லும் பள்ளி மாணவர்

பொது ஆகஸ்ட் 19,2019 | 20:01 IST

Share

கரூரை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் அர்ஜுன் வீடுகளில் நீர் மறுசுழற்சி செய்யும் முறையை வடிவமைத்துள்ளார். மாணவர் வடிவமைத்த செயல்பாட்டு மாதிரி கரூர் அரசு பொருட்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தனி தொட்டியில் சேகரித்து, வேதியியல், உயிரியல் முறைப்படி மறுசுழற்சி செய்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதே இத்திட்டம். மறுசுழற்சி செய்த நீரை குடிநீர் அல்லாத மற்ற உபயோகங்களுக்கு பயன்படுத்தலாம். இதனால் நீரின் பயன்பாடு குறைந்து அதிகளவு நீரை சேமிக்க முடியும் என்கிறார் மாணவர் அர்ஜூன்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X