Advertisement

ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்

அரசியல் ஆகஸ்ட் 19,2019 | 15:00 IST

Share

மன்மோகன் சிங் தலைமையில் 2007ல் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது ஏர்இந்தியாவுக்காக 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் தலைமையிலான குழு விமானங்களை வாங்கியது. கடும் நஷ்டத்திலிருந்த ஏர் இந்தியாவுக்கு சிதம்பரம் தலைமையிலான குழு விமானங்கள் வாங்கியது ஏன் என்றும், இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பிரச்சனை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. அதே நேரத்தில், அமலாக்கத்துறையும் இந்த வழக்கை விசாரிக்கிறது. இந்நிலையில்,சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்து, அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X