Advertisement

ஈரோட்டில் ரூ.300 கோடியில் மேம்பாலம்: முதல்வர் உறுதி

பொது ஆகஸ்ட் 21,2019 | 17:28 IST

Share

ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் கல்லூரி பொன்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் சதவீதம் 48.6 ஆக உயர்ந்துள்ளதாகவும், உயர்கல்வியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்றார். பெருந்துறை-காங்கேயம் சாலையில், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் முதல் பவானி வரை 98 கி.மீ., தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை தரம் உயர்த்தப்படும்; பவானி ஆற்றில் ஜம்பை அருகே தடுப்பணை அமைக்கப்படும்; 300 கோடி ரூபாய் மதிப்பில் திண்டலில் பாலம் கட்டப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X