ஆன்மிகம் வீடியோ » ஸ்ரீகண்ணபிரான் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி ஆகஸ்ட் 23,2019 15:00 IST
சென்னை சுங்கச்சாவடி பேருந்து நிலையம் அருகே உள்ள தியாகராயபுரம் குடியிருப்பு பகுதியில் 100 ஆண்டு பழமையான ஸ்ரீகண்ணபிரான் கோயிலில் கண்ணபிரான் பக்த சபா சார்பில் கிருஷ்ணஜெயந்தி விழா 3 நாள் கொண்டாடப்படுகிறது. கோ பூஜையுடன் தொடங்கிய விழாவில் கண்ணனுக்கு விதவிதமான பழங்களை மாலையாக அணிவித்து வாசனை திரவியங்களுடன் அபிஷேகம், அலங்காரம், நடைபெற்றது விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து