Advertisement

பயங்கரவாதிகள் ஊடுருவல்; மேட்டூர் அணைக்கு பாதுகாப்பு

பொது ஆகஸ்ட் 24,2019 | 15:39 IST

Share

லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 6பயங்கரவாதிகள் தமிழகத்தில் உடுருவியிருப்பதாக வந்த தகவலையடுத்து, மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், பாதுகாப்பையும் அதிகரித்துள்ளனர். இதன் ஒருபகுதியாக, மேட்டூர் அணைக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சனியன்று வெடிகுண்டு நிபுணர்கள், அணையின் வலது கரை, இடது கரை, கவர்னர் வியூபாயின்ட் மற்றும் அணையின் சுரங்கப்பாதைகளிலும் சோதனை மேற்கொண்டனர். அணையின் 16 கண் பாலம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய முன்னாள் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அணை பூங்காவிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X