Advertisement

டாஸ்மாக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி

பொது ஆகஸ்ட் 24,2019 | 19:40 IST

Share

ர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தின் கடைவீதியில் அரசு மதுபானக்கடை பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த மதுபானக்கடையை அகற்ற கோரி 3 ஆண்டுகளாக இளைஞர் கூட்டமைப்பினர் பொது மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் போலீஸ் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பரிந்துரையை ஏற்று கடையை மூட கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார். கடை மூடப்பட்டதை அறிந்த மங்கைமடம் கிராம மக்கள் ஒன்றிணைந்து மதுபானகடையில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டி மாலை அணிவித்தனர். பின்னர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X