Advertisement

வேதாரண்யத்தில் புதிய சிலை அமைப்பால் பதட்டம் தணிப்பு

பொது ஆகஸ்ட் 26,2019 | 14:00 IST

Share

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் ஞாயிறன்று காவல் நிலையம் முன்பு இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பினரின் ஜீப் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கார் சிலையை மற்றொரு தரப்பினர் அடித்து உடைத்தனர். இதனால் இரு சமூகத்தினர் இடையே கலவரம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து திருச்சி ஐஜி வரதராஜு, தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் தலைமையிலான 750க்கும் மேற்பட்ட அதிவிரைவு படை போலீசார் வேதாரண்யத்தில் குவிக்கப்பட்டனர். இரவு முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில், கலவரத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X