Advertisement

அரிசிக்கடையில் ரூ.9 லட்சம் கொள்ளை

சம்பவம் ஆகஸ்ட் 26,2019 | 00:00 IST

Share

திருப்பூர் பிச்சம்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் அப்பகுதியில் அரிசிக்கடை நடத்தி வருகிறார். சண்முகம் காலையில் சென்று கடை திறந்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது கல்லாபெட்டியில் வைத்திருந்த 9 லட்ச ரூபாய் கொள்ளை போனது தெரிய வந்தது. கடையின் கண்காணிப்பு கேமராக்கள் திருப்பி வைக்கப்பட்டு, ஹார்ட் டிஸ்க் மற்றும் கம்ப்யூட்டரும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளையனை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அனுப்பர்பாளையம் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X