Advertisement

ரூ.10 கோடி சுருட்டல்; 3 பேர் கைது

பொது ஆகஸ்ட் 27,2019 | 14:38 IST

Share

சத்தியமங்கலத்தில் இயங்கி வந்த ரிலீப் ஹெர்பல் என்ற நிறுவனம், மூலிகை மருந்து தயாரிக்க முதலீடு செய்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு, மாதம் 2,500 ரூபாய் லாபத்தொகையாக வழங்கப்படும் என கவர்ச்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை நம்பி ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த பலரும் முதலீடு செய்தனர். இந்நிலையில் மேலாளர் தங்கராஜ் மற்றும் பங்குதாரர்கள் பொதுமக்கள் முதலீடு செய்த சுமார் 10 கோடி ரூபாயை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. பணம் திரும்ப கிடைக்காததால், பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், ரிலீப் ஹெர்பல் நிறுவனத்தில் சோதனை நடத்திய போலீசார், பங்குதாரர்கள் பிரபாகரன், ஊழியர் பொன்னுசாமி, மேலாளர் தங்கராஜின் தந்தை துரைசாமி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலாளர் தங்கராஜ் பங்குதாரர்கள் ஆனந்தகுமார், பிரகாஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X