Advertisement

காவல்துறையில் களைகள் : இயக்குநரிடம் போலீஸ் மன்னிப்பு

சினிமா வீடியோ ஆகஸ்ட் 27,2019 | 18:00 IST

Share

விஜய்யை வைத்து ‛திருமலை', ‛ஆதி' படங்களை இயக்கியவர் ரமணா. தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ரமணா, சற்று மீண்டு வருகிறார். சாலை விதிகளை பின்பற்றி வந்த தன்னை போக்குவரத்து காவலர்கள் நடந்து கொண்ட விதத்தை வருத்தத்துடன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் ரமணா. அதில், விதிகளுக்கு உட்பட்டு என் காரை ஓட்டி வந்தேன். காவலர் ராமர் என்பவர் வழிமறித்து, நான் விதியை மீறுவதாக கூறி அபராதம் கட்ட சொன்னார், மறுத்தேன். எனது லைசன்ஸை வாங்கினார். உதவி ஆய்வாளர் குமார் என்பவர் என்னை பார்த்து, ‛‛ஏய்.. தள்ளி நின்னு பேசுடா.. மேல எச்சில் படப்போகுது... உன் நோய் எனக்கு ஒட்டிக்கும்..., பாதியிலயே சாவப் போறவனயேல்லாம் என்கிட்ட கூட்டிகிட்டு வந்து என் உயிர ஏன் எடுக்குற..? என தரக்குறைவாக பேசினார். கேன்சரால் பாதிக்கபட்டதை அறிந்தும் அவர் அப்படி பேசியதில் மிகுந்த மனவேதனை அடைந்தேன் என பதிவிட்டார். தொடர்ந்து அவருக்கு ஆதரவு பெருக, டிராபிக் போலீஸில் உள்ள அதிகாரிகள், ரமணாவிடம் மன்னிப்பு கோரினர். ‛‛இந்த நேர்மையான காவல்துறையின் விசாரணை நிகழ உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி'' என பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X