Advertisement

இப்படியொரு தார் சாலையை பார்த்திருக்கவே மாட்டீங்க...

பொது ஆகஸ்ட் 28,2019 | 14:16 IST

Share

தருமபுரி, பாகல்பட்டியில் இருந்து முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் வழியாக பொம்மிடி செல்லும் சுமார் 30 கிலோ மீட்டர் சாலை 60 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. தரமில்லாமல் போடப்படும் இச்சாலை, தார்க்கலவையோடு, கையோடு பெயர்ந்து வருகிறது. குச்சியை வைத்து கிளறினாலே ஜல்லி கற்கள் தாருடன் தெறித்து போகின்றன. மக்கள் வரிப்பணத்தில், தரமில்லாமல் அமைக்கப்படும் சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஐந்து முறை இந்த சாலை இப்படி தரமில்லாமல்தான் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரே கான்ட்ராக்டருக்கு இந்த வேலை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வெறும் கணக்கு காட்டுவதற்காக போடப்படும் இந்த சாலைக்கு ஒவ்வொரு முறையும் லட்சக்கணக்கில் பணம் ஒதுக்கப்படுவதால், இதில் முறைகேடுகள் நடந்திருக்கவும் வாய்ப்புள்ளதாக சந்தேகம் எழுப்பும் மக்கள், மாவட்ட நிர்வாகம் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X