Advertisement

ஏன் கேட்கிறோம் மயிலாடுதுறை மாவட்டம்?

பொது ஆகஸ்ட் 28,2019 | 17:00 IST

Share

மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை பிரித்ததிலிருந்தே மயிலாடுதுறை கோட்ட மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதத்தில் புதிதாக நான்கு புதிய மாவட்டங்களை தமிழக அரசு அறிவித்தபோதும் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்காததால் மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள மாவட்ட அமைப்பு குழு சார்பாக ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதனன்று வணிகர்கள், விவசாய அமைப்புகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் குத்தாலம், மங்கைநல்லூர், செம்பனார்கோவில், வைத்திஸ்வரன்கோவில் ஆகிய நான்கு திசைகளிலிருந்து பாத யாத்திரையாக மயிலாடுதுறை வந்தடைந்து வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், ஏன் கேட்கிறோம் மயிலாடுதுறை மாவட்டம் என்ற தலைப்பில் மயிலாடுதுறையின் வரலாற்று பக்கங்களைக் கொண்ட கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கியும், கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X