Advertisement

சூப்பர் ஸ்டார்: உசுப்பேற்றும் விஜய்யின் அம்மா

சினிமா வீடியோ ஆகஸ்ட் 28,2019 | 17:46 IST

Share

தமிழ்த் திரையுலகத்தில் அடிக்கடி 'யார் அடுத்த சூப்பர்ஸ்டார்' என்ற சர்ச்சை வந்து கொண்டேயிருக்கும். கடந்த சில ஆண்டுகளாக அந்த சர்ச்சை ஓய்ந்து இருந்த நிலையில் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர், விஜய்க்கு எழுதிய கடிதம் ஒன்று மீண்டும் பரபரப்பாகி உள்ளது. அந்த கடிதத்தில் ‛‛நான் பெற்ற பிள்ளை இன்று கோடானு கோடி தாய்மார்கள், ரசிகர்கள் உள்ளங்களில் தவழ்ந்து கொண்டிருப்பதையும், தளபதியாய் கொண்டாடிக் கொண்டிருப்பதையும் காண்கையில் என் இமை ஓரம் ஈரம் கசிந்து வழிகிறது. “எம்கே தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில், தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாக நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்,” என முடித்துள்ளார். இதில் அடுத்த சூப்பர் ஸ்டார் என விஜய்யை, அவரே குறிப்பிட்டுள்ளது தான் இப்போதைய சர்ச்சைக்குக் காரணமாகி உள்ளது. ஏற்கனவே சிலர் ரஜினிக்கு அடுத்தப்படியாக விஜய், ரஜினியை முந்திய விஜய் என்று சிலர் அவரை கொம்பு சீவி வருகின்றனர். இப்போது விஜய்யின் அம்மாவும் களமிறங்கி உள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X