Advertisement

திருக்கடையூரில் அமைச்சர் ஆயுஷ் ஹோமம்

பொது ஆகஸ்ட் 28,2019 | 18:00 IST

Share

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில்அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆயுள் விருத்தி வேண்டி ஆயுஷ்ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் ஆகியவற்றை செய்து சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு பூசம் நட்சத்திர தினமான புதனன்று புதுச்சேரி மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அவரது மனைவி வசந்தி, மகன் சிவஹரி ஆகியோருடன் வந்து ஆயுஷ்ஹோமம் செய்தார். ஹோமத்தை அமிர்தகடேஸ்வரர் குருக்கள் செய்து வைத்தார். பின்னர் கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு அமைச்சருக்கு தீர்த்த அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. அதனையடுத்து மாலை மாற்றிக்கொண்ட தம்பதியினருக்கு ஹோம பிரசாதங்கள் வழங்கப்ப ட்டன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X