Advertisement

பாலியல் சீண்டல் வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சம்பவம் ஆகஸ்ட் 29,2019 | 12:00 IST

Share

வேலூர் மாவட்டம், ஆம்பூர் திருமால்புரத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி. 2 வருடங்களுக்கு முன், இவரின் கணவன் சரவணன் உயிரிழந்த நிலையில், அரசு தரும் விதவை உதவி தொகை பெற சான்று வழங்குமாறுதுத்திப்பட்டு வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமாரிடம் மனு கொடுத்துள்ளார். அஞ்சலியின் செல்போன் எண்ணைப் பெற்று கொண்ட வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், அவருக்குப் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஞ்சலியின் சகோதரர்கள் வருவாய் ஆய்வாளரை அலுவலகத்துக்கு சென்று ஜெயக்குமாரை தாக்கியுள்ளனர். தொடர்ந்து அஞ்சலி கொடுத்த புகாரின் பேரில் ஜெயக்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X