Advertisement

வந்தாச்சு பால் ஏ.டி.எம்.,

பொது ஆகஸ்ட் 29,2019 | 17:30 IST

Share

தமிழகத்தில் முதன் முறையாக அரூரில், பால் வழங்க ஏ.டி.எம்., மையம் அமைக்கப்பட்டுள்ளது. அரூரை அடுத்த கொளகம்பட்டியை சேர்ந்த விவசாயி முருகன், பாலை கொள்முதல் செய்து, தனியார் நிறுவனத்துக்கு அனுப்பி வந்தார். மக்களுக்கு 24 மணி நேரமும், பால் வழங்க வேண்டுமென நினைத்த அவர், ஹரியானா மாநிலத்தில் இருந்து, 4 லட்சம் ரூபாய்க்கு, பால் ஏ.டி.எம்., இயந்திரத்தை வாங்கி வந்தார். அரூர் நான்கு ரோட்டில் நிறுவப்பட்டுள்ள இந்த பால் ஏ.டி.எம்., இயந்திரம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X