Advertisement

நடிகை மீது நடவடிக்கை

பொது ஆகஸ்ட் 29,2019 | 17:00 IST

Share

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை அமலாபால், புதுச்சேரியில் போலி இருப்பிட சான்றிதழ் அளித்து சொகுசு கார் வாங்கி பதிவு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேரள மாநில போலீசார், புதுச்சேரி அரசின் போக்குவரத்து துறைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் இவ்வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்த போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், அமலாபால் சொகுசு கார் பதிவு செய்த விவகாரம் தொடர்பான கடிதம் புதுச்சேரி அரசுக்கு வந்துள்ளது. தற்போது அதன் மீது நடவடிக்கை எடுக்க மாநில சட்டத்துறை வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X