Advertisement

கணபதி தரிசன கண்காட்சி

பொது ஆகஸ்ட் 29,2019 | 15:00 IST

Share

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை பூம்புகார் கைவினைப்பொருட்கள் விற்பனை நிலையத்தில் கணபதி தரிசனம் என்ற பெயரில் விநாயகர் சிலை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் பித்தளை, பஞ்சலோகம், செம்பு, வெள்ளெருக்கு, பளிங்குக்கல், மார்பிள், சுட்டமண், காகிதக்கூழ் மற்றும் பல்வேறு வகை மரங்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புல்லட் விநாயகர், கம்ப்யூட்டர் விநாயகர், மொபைல் விநாயகர், விதை விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும் விநாயகர் சிலைகள் உள்ளன. இந்த கண்காட்சியில் விநாயகர் சிலைகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. விநாயகர் சிலை கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X