Advertisement

தமிழகத்திற்கு வருகிறது லண்டன் மருத்துவமனை!

பொது ஆகஸ்ட் 30,2019 | 16:34 IST

Share

தமிழகத்திற்கு அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழக முதல்வர் பழனிசாமி, இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். வெள்ளியன்று, லண்டனுக்கு சென்று அந்நாட்டு எம்.பி.,க்களை சந்தித்து, சுகாதார திட்டம் குறித்து கலந்துரையாடினார். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, இந்தியாவில் சிறந்த மருத்துவர்களையும், நர்சுகளையும் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும், மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் 1.58 கோடி குடும்பங்கள் பயனடைவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், நகர உட்கட்டமைப்பு, வீட்டுவசதி, பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் தமிழகத்தில் அதிகளவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பும் விடுத்தார். பின்னர், லண்டனில் உள்ள பிரபல கிங்ஸ் மருத்துவனையை நேரில் பார்வையிட்டு, ஆம்புலன்ஸ் சேவை பற்றி முதல்வர் கேட்டறிந்தார். இதையடுத்து, லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் நிறுவ, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X