Advertisement

ஐஎன்எக்ஸ் மோசடி; சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு

பொது ஆகஸ்ட் 30,2019 | 17:27 IST

Share

ஐ.என்.எக்ஸ்., மோசடி வழக்கில், கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தின் காவல் ஆகஸ்ட் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த காவல் முடிந்து, வெள்ளியன்று அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிதம்பரத்திடம் மேலும் பல கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது; எனவே, அவரது காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுவரை 400 கேள்விகளுக்கு சிதம்பரம் பதிலளித்துள்ளதாகவும், ஆனால், அதற்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிஐ காவலை எதிர்த்து தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 2ல் விசாரணைக்கு வருவதால், அதுவரை சிபிஐ காவலில் இருக்க தயார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர் 2 வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X