பொது » காவிரி மீட்பு இயக்கத்துக்கு விவசாயிகள் ஆதரவு ஆகஸ்ட் 30,2019 20:28 IST
காவிரி நதியை மீட்டெடுத்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 'காவிரி கூக்குரல்' என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் துவங்கியுள்ளார். அதன்படி, செப்டம்பர் 3ம்தேதி முதல் 15ம்தேதி வரை தலைக்காவிரி முதல் திருவாரூர் வழியாக சென்னை வரை சுற்றுப்பயணம் செய்கிறார். காவிரி கூக்குரல் இயக்கத்தின் கீழ், தமிழகம், கர்நாடக காவிரி வடிநில பகுதிகளில் நான்காண்டுகளில் 73 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மரங்களை நடுவதன் மூலமே காவிரியில் நீர்வளம் அதிகரிக்கும்; விவசாயம் பெருகும் என்று, விவசாய சங்க பிரதிநிதிகள் கூறினர்.
வாசகர் கருத்து