Advertisement

வங்கிகள் இணைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பொது ஆகஸ்ட் 30,2019 | 20:55 IST

Share

நாட்டில் மொத்தம் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளை, இணைப்பின் மூலம் 12 ஆக குறைக்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த நிதியாண்டில், அரசின் நடவடிக்கையால் 1.21 லட்சம் கோடி வாராக்கடன் வசூலாகியுள்ளது. கடன் வசூலிப்பதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை வங்கிகள் எட்டியதால், வாராக்கடன் கணிசமாக குறைந்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் 59 நிமிடங்களில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றார். 7 வங்கிகளில் தான் 82 சதவீத வர்த்தக பணிகள் நடந்து வருகின்றன. 14 பொதுத்துறை வங்கிகள் லாபத்தை ஈட்டியுள்ளன. சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகள் அதிகரித்துள்ளது. பஞ்சாப் நேஷனல், ஓரியன்டல், யுனைடட் வங்கிகள் இணைக்கப்படும். கனரா வங்கியும் சிண்டிகேட் வங்கியும் இணைக்கப்படுகிறது. யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி, கார்பரேசன் வங்கிகள் இணைக்கப்படும் இந்தியன் வங்கியும், அலகாபாத் வங்கியும் இணைக்கப்படுகின்றன. வங்கிகள் இணைப்பால் ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படாது; பணி நீக்கமும் செய்யப்பட மாட்டார்கள் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X