விளையாட்டு » மாநில பெத்தாங் போட்டி ஆகஸ்ட் 31,2019 16:00 IST
புதுச்சேரி நியூ பெத்தாங் விளையாட்டு கழகம் சார்பில், மாநில அளவிலான பெத்தாங் போட்டி 2 நாட்கள் உப்பளம் துறைமுக திடலில் நடைபெறுகிறது. 36 விளையாட்டு சங்கங்கள் இணைந்து 183 அணிகள் பங்கு பெற்று 549 வீரர்கள் விளையாட்டில் கலந்து கொண்டுள்ளனர். போட்டிகளை அசோசியேஷன் தலைவர் பிராங்ளின் தலைமையில், எம்.எல்.ஏ., அன்பழகன் துவக்கி வைத்தார். வெற்றிபெறும் அணிகளுக்கு ஞாயிறன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
வாசகர் கருத்து