Advertisement

கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

ஆன்மிகம் வீடியோ ஆகஸ்ட் 31,2019 | 18:00 IST

Share

கோவில் நகரமான கும்பகோணத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டும் விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டியுள்ளது. முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்து மக்கள் கட்சி சார்பில் மடத்துத் தெருவில் வைக்கப்பட்டுள்ள சயன விநாயகருக்கு கஜ பூஜை, கோ பூஜை, உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் ஆரத்தி தட்டு ஏந்தி வழிபட்டனர். இதே போன்று பாலக்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகருக்கு கோ பூஜை, அஷ்வ பூஜை, சங்கல்பம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இது போன்று கும்பகோணம் நகரில் 54 இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், 3 ஆம் தேதியன்று காவிரி ஆற்றில் கரைக்கப்படும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X