Advertisement

மாணவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல்

சம்பவம் ஆகஸ்ட் 31,2019 | 18:00 IST

Share

வேலூர், சத்துவாச்சாரி வெள்ளாள தெருவைச் சேர்ந்தவர் கென்னடி. வெளிநாட்டில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது குடும்பம் சத்துவாச்சாரியில் உள்ளது. மகன் கோகுல் தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் பயின்று வருகிறார். வியாழனன்று கல்லூரி முடிந்தவுடன் அதே கல்லூரியில் படிக்கும் சுதர்சன் மற்றும் மூன்று நண்பர்கள் சேர்ந்து கோகுலை காரில் கடத்தி சென்றுள்ளனர் அவனது வீட்டிற்கு தொடர்பு கொண்டு மூன்று கோடி கேட்டு செல்போனில் மிரட்டியுள்ளனர். குடும்பத்தினர் சத்துவாச்சாரி போலீசில்புகார் அளித்ததால், மூன்று தனிப்படைகளை அமைத்து மாணவனை மீட்க திட்டமிட்டனர். அவர்கள் தொகையைக் குறைத்து 5 லட்சம் ரூபாய் தருமாறு தெரிவித்தனர். தனிப்படையினர் கட்டுகட்டாக வெள்ளை பேப்பர்களைக் கட்டி பணம் இருப்பதை போல் ஒரு பேப்ரை உருவாக்கி அந்த பையை எடுத்துக்கொண்டு வள்ளிமலை அருகே அவர்கள் சொன்ன இடத்தில் காத்திருந்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X