Advertisement

'மெர்சல்' தயாரிப்பாளர் மீது மேஜிக் நிபுணர் வழக்கு

சினிமா வீடியோ ஆகஸ்ட் 31,2019 | 20:34 IST

Share

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் பணியாற்றியவர் கனடாவின் மேஜிக் நிபுணர் ராமன் சர்மா. இவருக்கு தயாரிப்பு நிறுவனம் பண பாக்கி வைத்துள்ளது. இதனால் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவில் ராமன் சர்மா கூறுகையில், “'தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன். பிகில்' பட செட்டில் அட்லீ, விஜய்யை சந்தித்துப் பேசினேன். அவர்களிடத்தில் எனது பணபாக்கி பற்றி பேசுவது சரியாக இருக்காது எனப் பேசவில்லை. 'மெர்சல்' படத்தில் பணியாற்றிய சிலரிடம் பேசிய போது அவர்களுக்கும் தயாரிப்பு நிறுவனம் பணம் பாக்கி வைத்துள்ளது. தயாரிப்பாளர் பணப் பிரச்சினையில் இருப்பதாகக் கூறுகிறார். ஆனால் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி வெளிநாட்டில் ஷாப்பிங் செய்து வருகிறார்” என பதிவிட்டுள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X