Advertisement

வந்தாச்சு தண்ணீர் ஏ.டி.எம்.,: 5 ரூபாய்க்கு ஒரு லிட்டர்

பொது செப்டம்பர் 01,2019 | 17:40 IST

Share

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக சுற்றுலா பயணிகளுக்கு தண்ணீர் கிடைக்க 68 இடங்களில் வாட்டர் ஏ.டி.எம்., நிறுவப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட், மக்கள் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள நீர் ஏ.டி.எம்., திட்டத்தை கலெக்டர் இன்னோசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். இயந்திரத்தில் 5 ரூபாய் நாணயத்தை செலுத்தி 1 லிட்டர் தண்ணீர் பெற்றுக் கொள்ளலாம். 2 ரூபாய்க்கு 400 மில்லியும், 1 ரூபாய்க்கு 200 மில்லி நீரும் பெறலாம். நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்து வருவதை தவிர்த்து, இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் இன்னோசென்ட் திவ்யா கேட்டுக் கொண்டுள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X