Advertisement

விநாயர் சதுர்த்தி கோலாகலம்

ஆன்மிகம் வீடியோ செப்டம்பர் 03,2019 | 12:06 IST

Share

காரைக்காலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பாரதியார் வீதி ஸ்ரீ வீரசக்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் தங்க கவச அலங்காரமும் நடைபெற்றது. தொடர்ந்து தாரை, தப்பட்டை முழங்க உற்சவர் ஸ்ரீ வீரசக்தி விநாயகர் மூஞ்சூறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காரைக்கால் வடமறைக்காடு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ ராஜகணபதி விநாயகருக்கு அப்பகுதியிலுள்ள பெண்கள் தங்களது வீட்டிலிருந்து இனிப்பு வகைகள், பழங்கள், கொழுக்கட்டை வகைகளை எடுத்து வந்து படையலிட்டு, ஒரு சேர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். நகரின் மையத்தில் அமைந்துள்ள கடைத்தெரு பிள்ளையார் எனப்படும் ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயிலில் வெள்ளி கவசம் அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகரை பக்தர்கள் வழிபட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X