Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 04-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு செப்டம்பர் 04,2019 | 18:35 IST

Share

பெடரர் அதிர்ச்சித் தோல்வி யு.எஸ்., ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடக்கிறது. இதில் ஐந்து முறை சாம்பியன் ஆன சுவிட்சர்லாந்தின் பெடரர், பல்கேரியாவின் டிமிட்ரோவிடம் 6-3, 4-6, 6-3, 4-6, 2-6 என்ற கணக்கில் போராடி வீழ்ந்தார். --------------------------- டில்லி அணியில் அஷ்வின் ஐ.பி.எல்., தொடரில் கடந்த இரு சீசன்களாக பஞ்சாப் அணி கேப்டனாக இருந்தார் தமிழக 'சுழல்' வீரர் அஷ்வின். வரும் சீசனில் இவரை விடுவிக்க, பஞ்சாப் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இவரை வாங்க டில்லி அணி சார்பில் ஏற்பாடுகள் நடக்கின்றன. 2020ல் டில்லி அணிக்காக அஷ்வின் விளையாடுவார் எனத் தெரிகிறது. -------------------------- இந்தியா-ஓமன் பலப்பரீட்சை வரும் 2022ல் நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து தொடருக்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச்சுற்றில் இந்திய அணி, 'இ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. வங்கதேசம், ஓமன், ஆப்கானிஸ்தான், கத்தாருடன் மோத உள்ளது, செப்டம்பர் 5ம் தேதி கவுகாத்தியில் நடக்கும் முதல் போட்டியில் இந்திய அணி, ஓமனை சந்திக்கிறது. --------------------------- தொடரை வென்றது நியூசிலாந்து இலங்கை, நியூசிலாந்து மோதிய இரண்டாவது 'டுவென்டி-20' போட்டி பல்லேகெலேயில் நடந்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கிராண்ட்ஹோம், புரூஸ் அரைசதம் அடித்து உதவ, 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 'டுவென்டி-20' தொடரை நியூசிலாந்து 2-0 என வென்றது. ---------------------------


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X