Advertisement

கல்லூரிகளுக்கான ஹாக்கி போட்டி:

விளையாட்டு செப்டம்பர் 04,2019 | 18:51 IST

Share

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி சரவணம்பட்டி, குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோட்டை சேர்ந்த 15 அணிகள் பங்கேற்றன. புதனன்று நடந்த போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி 6-0 என்ற கோல் கணக்கில் சி.எம்.எஸ். கல்லூரியையும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், 2-0 என்ற கோல் கணக்கில் உடுமலை அரசு கலைக்கல்லூரி அணியையும் வென்றன. நந்தா கல்லூரி 3-0 என்ற கோல் கணக்கில், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியையும், என்.ஜி.பி., கல்லூரி, 4-0 என்ற கோல் கணக்கில் பாரதியார் பல்கலைக்கழக அணியையும் வென்றன. உடுமலை வித்யாசாகர் , பி.எஸ்.ஜி., நந்தா, என்.ஜி.பி., கல்லூரிகள் லீக் போட்டிக்கு தகுதி பெற்றன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X