Advertisement

விநாயகர் சதுர்த்திக்கு கயிறு கட்டிய மாணவர்களுக்கு அடி

பொது செப்டம்பர் 04,2019 | 20:05 IST

Share

தருமபுரி அதியமான் கோட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர், விநாயகர் சதுர்த்திக்காக கையில் கட்டியிருந்த கங்கன கயிறுடன் பள்ளிக்கு சென்றுள்ளனர். அந்த மாணவர்களை, பள்ளி உதவி தலைமையாசிரியர் உள்ளிட்ட இருவர் பிரேயரில் வைத்து அடித்ததாக கூறப்படுகிறது. அத்துடன், பாகல்பட்டியை சேர்ந்த மாணவர்கள் மூன்றுபேரை தனி அறையில் வைத்து அடித்ததாகவும் தெரிகிறது. இதில் ஒரு மாணவன் மயங்கிவிழுந்ததால், மூவரையும் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். நடந்ததை அறிந்த பெற்றோர்கள் மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவர்களை தாக்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜாதியை அடையாளப்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ண கயிறுகளை கட்டுவதாக வந்த புகாரையடுத்து, கயிறு கட்டுவதையும், நெற்றியில் திலமிடுவதையும் தடுக்க வேண்டுமென சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X