Advertisement

1 கிலோ தங்கம் 25 வெள்ளி வெள்ளி கொள்ளை

சம்பவம் செப்டம்பர் 05,2019 | 12:20 IST

Share

சீர்காழியை அடுத்த புத்தூர் கடைவீதியில் ராஜஸ்தானைச் சேர்ந்த சிவபூரி என்பவர் திருப்பதி பைனான்ஸ் என்ற பெயரில் அடகுக் கடை நடத்தி வருகிறார். புதனன்று, கடையைத் திறந்த போது சிசிடிவி ஒயர்கள் அறுந்து கிடந்தது, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சோதனை செய்ததில் அடகு கடையின் பக்கத்தில் பூட்டிக் கிடந்த கடையின் வழியே வந்த கொள்ளையர்கள் சுவற்றைத் துளையிட்டு உள்ளே புகுந்து, லாக்கரை உடைத்து அதில் கைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ தங்க நகைகள், 25 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதுடன், கடை வீதியைக் கண்காணிக்க வைத்திருந்த சிசிடிவி. கேமராவின் ஹாட்டிஸ்கையும் எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் அடகு கடையின் சிசிடிவிக்கு என தனியே இருந்த ஹாட்டிஸ்கை கவனிக்காமல் விட்டுச்சென்றுள்ளனர். அதனைக் கைப்பற்றிய பொலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X