பொது » நீலகிரி அணைகள் திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை செப்டம்பர் 05,2019 15:00 IST
நீலகிரியில் பெய்யும் தொடர் மழை காரணமாக பைக்காரா, கிளன்மார்கன், முக்கூர்த்தி ஆகிய மூன்று அணைகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. 100 அடி உயரம் கொண்ட பைக்காரா அணை நிரம்பியதால், அதிலிருந்து வினாடிக்கு, 1,200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 33 அடி உயரமுள்ள கிளன்மார்கன் அணையிலிருந்து 1060 கனஅடி நீரும், 18 அடி உயரமுள்ள முக்கூர்த்தி அணையிலிருந்து 620 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. அணைகள் திறப்பால் மாயார், தெங்குமரஹாடா பகுதி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
வாசகர் கருத்து