Advertisement

பழிவாங்கும் நடவடிக்கைக்கு காலம் பதில் சொல்லும்

அரசியல் செப்டம்பர் 07,2019 | 12:00 IST

Share

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 26 ம் தேதி தொடங்கி செப்டம்பர் 6ம் தேதி வரை நடைபெற்றது. தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டசபையை ஒத்திவைத்தார். இதனையடுத்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இந்த பட்ஜெட் அணைத்துத் தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டுள்ளது. குறிப்பாக விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு 5 ஆயிரம் கொடுக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றார். புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்குவது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறிய முதல்வர், இதுதொடர்பாக கவர்னரைச் சந்திப்போம் என்றார்.. ப.சிதம்பரம் மீது யூகத்தின் அடைப்படையில் கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கர்நாடக முன்னாள் அமைச்சர் மீது தேவையில்லாமல் வழக்கு போடப்பட்டுள்ளது. இது பழிவாங்கும் நடவடிக்கையாகும். இதற்கு காலம் பதில் சொல்லும் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X