Advertisement

ஊராட்சி செயலரை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை

பொது செப்டம்பர் 07,2019 | 16:30 IST

Share

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள மூன்றாம் சேத்தி ஊராட்சியைச் சேர்ந்த முதல் சேத்தி ஜீவா காலனி கிராமத்தில் சுமார் 300 க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்பட்ட குடிநீர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. கடந்த ஓர் ஆண்டாக முறையான குடிநீர் இல்லாமல் அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்று தள்ளு வண்டியில் குடிநீர் பிடித்து வருவதாக கிராம பொதுமக்கள் தெரிவித்தனர். இது குறித்து வட்டார ஊராட்சி அலுவலர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் பிரச்சனையைத் தீர்க்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் . இந்நிலையில், அப்பகுதிக்கு வந்த ஊராட்சி செயலர் கலியமூர்த்தி இப்பகுதிக்குக் கூட்டுகுடிநீர் திட்டம் தேவையில்லை என கூறியதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் வழங்காததைக் கண்டித்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X