Advertisement

மஹாகணபதி ஊஞ்சல் உற்சவம்

ஆன்மிகம் வீடியோ செப்டம்பர் 08,2019 | 12:00 IST

Share

தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரம் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீமஹாகணபதி கோவில் உள்ளது. அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் கௌதம முனிவரால் பூஜிக்கப்பட்டு வேண்டிய வரம் தரும் இக்கோவிலில் விநாயக சதுர்த்தி ப்ரமோத்ஸவம் 23ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஸப்தாவரணம் எனும் 1.நாதஸ்வரமேளம் 2.வேதம் 3.பஜனைநாமம் 4.நாட்டியம் 5.தேவாரம் 6.மௌனம் 7.சகலவாத்யம் ஆகிய ஏழுமுறை பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து விழாவின் இறுதிநாள் நிகழ்ச்சியாக ஸ்ரீமஹாகணபதி ஊஞ்சல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X