Advertisement

ஸ்ரீ கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆன்மிகம் வீடியோ செப்டம்பர் 08,2019 | 16:43 IST

Share

திருவள்ளூர் மாவட்டம் மணலிபுதுநகர் அருகே இடையஞ்சாவடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாக சாலை பூஜைகளுடன் ஹோமங்கள் வளர்கப்பட்டு, மந்திரங்கள் ஓதப்பட்டது. புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரைக் கொண்டு கங்கை அம்மன், செல்வ விநாயகர், முருகர் நவக்கிரகம் ஆகிய சன்னதிகளில் உள்ள விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் புனித நீர், பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது. மணலி புதுநகர் நாப்பாளையம் விச்சூர் கொண்டகரை ஆண்டார்குப்பம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு 1008 கலச நீரும், அன்னதானமும் வழங்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X