Advertisement

சண்டே மார்க்கெட் கடைகள் அடைப்பு

பொது செப்டம்பர் 08,2019 | 17:00 IST

Share

புதுச்சேரியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக காந்திவீதி, நேரு வீதி ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் சாலையோர கடைகள் செயல்பட்டு வருகிறது. ஞாயிறன்று மட்டும் செயல்படுவதால் இதனை சண்டே மார்க்கெட் என்று அழைக்கத் தொடங்கினர். இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.,க்கள் சண்டே மார்கெட் கடைகளால், அந்தப்பகுதியில் உள்ள கடைகளின் வியாபாரம் பாதிப்பதாகவும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் அங்குள்ள கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்ததையடுத்து முதல்வர், நாராயணசாமி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிறன்று மட்டும் இயங்கும் 1000 மேற்பட்ட சண்டே மார்கெட் கடைகள் அடைக்கப்பட்டனர். மேலும் வியாபாரிகள் அனைவரும் காந்திவீதியில் இருந்து, ஊர்வலமாக சென்று சட்ட சபையில் முதல்வரிடம் மனு அளித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X